இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல !!

இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல !!

Update: 2021-04-16 11:14 GMT

இந்தியாவில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதை அடுத்து  கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன . இருந்த போதிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் இந்த கொடிய கொரோனா நோய்யில் இருந்து தப்பிக்க போராடி கொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளி என அதன் விலை தொடர்ந்து ஏறி கொண்டே செல்கிறது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணத்தை சிறுகசிறுக சேமித்து, தங்கம் வாங்குவதை பலரும் ஒரு முக்கிய பழக்கமாக வைத்திருக்கிறார்கள். செலவு போக கையில் பணம் சேர்ந்தால் அவர்கள் நினைவுக்கு முதலில் வருவது தங்கம்தான். அப்படிப்பட்ட தங்கத்தை இனி வாங்குவது கஷ்டம் போல அதன் விலையும் ஏறிக்கொண்டே செல்கிறது.

கடந்த ஏப்ரல் 01 ஆம் தேதி ரூ.33,904க்கு விற்ற ஒரு சவரன் தங்கம் இன்று ஏப்ரல் 16 ஆம் தேதி ரூ.35,120க்கு விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,390-க்கும், சவரன் ரூ.35,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,358 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்கப்படுகிறது.ஒரு கிலோ வெள்ளி 73500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in
 

Tags:    

Similar News