இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல !! ஒரு சவரன் ரூ. 37,000ஐ தாண்டியது !!
இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல !! ஒரு சவரன் ரூ. 37,000ஐ தாண்டியது !!
கடந்த ஆண்டு தங்கத்தின் விலை உச்சிக்கு சென்றது அதாவது ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாய் வரை சென்றது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. இதனால் தங்க நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு பவுனுக்கு ரூ.1,500 வரை விலை குறைந்தது. பின்னர் விலை சற்று ஏறுவதும் இறங்குவதுமாக காணப்பட்டது.
மே மாத தொடக்கத்தில் சற்று குறைந்த தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர் உயர்வில் சென்று கொண்டுள்ளது.இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 384 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,200-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 48 ரூபாய் உயர்ந்து, ரூ.4,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் உயர்ந்து ரூ.77,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.