கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவை ஏற்படுத்தும்! WHO எச்சரிக்கையால் பரபரப்பு !!
கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவை ஏற்படுத்தும்! WHO எச்சரிக்கையால் பரபரப்பு !!
கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதால் பேரழிவை ஏற்படுத்தும் என என உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதோனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதுடன், அதிக உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருவதால் அதனை எதிர்கொள்ள உலக நாடுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில், கொரோனா தொற்றால் 1,00,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்தறை தெரிவித்துள்ளது. கடந்த 61 நாட்களில் பதிவாகியுள்ள குறைந்தபட்ச பாதிப்பு இதுவாகும். 1,74,000 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் பாதிப்பால் மேலும் 2,427 பேர் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் தினசரி கொரோனா உயிரிழப்புகளில் 28 விழுக்காடு இந்தியாவில் பதிவாகிறது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், சீனாவின் குவாங்ஸோ நகரில் 94 பேருக்கு டெல்டா வகை தொற்று உறுதியானது. தற்போது தமிழகத்திலும் இந்த கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவன இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதோனம் உருமாறிய கொரோனா மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து டெட்ரோஸ் அதோனம் மேலும் கூறுகையில், உருமாறிய டெல்டா வகை வைரஸ் உட்பட உருமாறிய கொரோனா வைரஸ் உலகளாவிய பரவுதல் காரணமாக கவலையை ஏற்படுத்தி வருகிறது. கட்டுப்பாட்டை தளர்த்துவது தடுப்பூசி போடாதவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முன்வந்து விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
newstm.in