இந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு.. 483 பேர் உயிரிழப்பு !!
இந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு.. 483 பேர் உயிரிழப்பு !!
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.19 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.12 கோடியாக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 38,740 பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர்.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,05,513 ஆக குறைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.12 சதவிகிதமாக உள்ளது. கடந்த 32-நாட்களாக தொற்று பாதிப்பு விகிதம் 3 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளது.
கொரோனா மீட்பு விகிதம் 97.36-சதவிகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 483- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 19 ஆயிரத்து 470- ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,05,513 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 42,34,17,030 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
newstm.in