மீண்டும் குறைந்த தங்கம் விலை! இன்னும் 2 தினங்களுக்கு இந்த விலை தான்!

மீண்டும் குறைந்த தங்கம் விலை! இன்னும் 2 தினங்களுக்கு இந்த விலை தான்!

Update: 2021-02-27 07:45 GMT

 

சென்னையில் தங்கம் விலை மீண்டும் 35 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. நேற்று, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.34,912-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை அடுத்தடுத்து உயர்ந்து கொண்டே சென்றது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி உச்சம் தொட்டது. 

இந்நிலையில், தங்கம் விலை தற்போது பெரிய அளவில் குறைந்து வருகிறது. இதுவரை இல்லாதவிற்கு மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. அதாவது, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஒரு சவரன் ரூ.35,640 -க்கு விற்பனையானது. பின்னர், அடுத்த சில  நாட்களில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. 

மீண்டும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தங்கம் விலை சரிந்து கொண்டு வருகிறது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,912-க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் 1 கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, ரூ.4,364-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை 75,000 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

26 பிப்ரவரி 2021 - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,912-க்கு விற்பனை
25 பிப்ரவரி 2021 - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,976-க்கு விற்பனை
24 பிப்ரவரி 2021 - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,304-க்கு விற்பனை
23 பிப்ரவரி 2021 - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,312-க்கு விற்பனை
22 பிப்ரவரி 2021 - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,160-க்கு விற்பனை
21 பிப்ரவரி 2021 - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,008-க்கு விற்பனை
 

Tags:    

Similar News