தங்க கோயிலில் மகாலட்சுமி யாகம்! ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்!

தங்க கோயிலில் மகாலட்சுமி யாகம்! ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்!

Update: 2021-03-10 15:48 GMT

இந்தியாவில் 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 3 நாள் பயணமாக நேற்று தனி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதையடுத்து, இன்று ஹெலிகாப்டரில் வேலூா் சென்று அங்குள்ள பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

அங்குள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டும் மீண்டும் வேலூரில் இருந்து  சென்னை விமான நிலையம் வந்து, காரில் கவா்னா் மாளிகை செல்கிறார். மார்ச்11ம் தேதி  சென்னையில்  அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு  பிற்பகலில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் ஜனாதிபதி மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருப்பதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை வந்திருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர்.

இந்தக் குழுவில் ஜனாதிபதியின் பாதுகாப்புபடை உயா் அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிலைய அதிகாரிகள், முக்கிய பிரமுகா்களின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனா். இதுதவிர சென்னை பழைய விமான நிலையத்தில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மார்ச் 11வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பு  தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News