லட்டு தயாரிக்க நெய் அனுப்பியதில் முறைகேடு.. ராஜேந்திர பாலாஜிக்கு மேலும் சிக்கல்.. மதுரை அலுவலகத்தில் சோதனை !!
லட்டு தயாரிக்க நெய் அனுப்பியதில் முறைகேடு.. ராஜேந்திர பாலாஜிக்கு மேலும் சிக்கல்.. மதுரை அலுவலகத்தில் சோதனை !!
மதுரை ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது முதல் அவர் தலைமறைவானார். இரண்டு வாரங்களாக அவரை 8 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்த போது மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2 நாட்களாக மதுரை ஆவின் நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது திருப்பதி லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி நெய் விநியோகம் செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மதுரை ஆவின் நிறுவன மேலாளர் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in