பிரதமர் மோடியை அரை மணி நேரம் காக்க வைத்து, கூட்டத்தை புறக்கணித்த மம்தா!
பிரதமர் மோடியை அரை மணி நேரம் காக்க வைத்து, கூட்டத்தை புறக்கணித்த மம்தா!
நேற்று பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா புறக்கணித்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாநில முதல்வர், அந்நாட்டின் பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்து, கூட்டத்தைப் புறக்கணித்தது இது தான் முதல் முறை என்று பத்திரிக்கைகள் மம்தா குறித்து எழுதி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி ஒடிஷா, மேற்குவங்க மாநிலங்களில் யாஸ் புயல் பாதிப்புகளை நேற்று நேரில் பார்வையிட்டார். பிரதமர் மேற்கு வங்கம் சென்ற போது அவரை வரவேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமான நிலையத்திற்கு வரவில்லை. ஆளுநர் ஜக்தீப் தங்கர் மட்டுமே வந்திருந்தார்.
விமானம் மூலம் புயல் பாதிப்புகளை பிரதமர் நேரடியாக கண்டறிந்த பிறகு மேற்குவங்க முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டார்.
அதனால் கோபமடைந்த மம்தா பானர்ஜி கூட்டத்தைப் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மம்தா பேனர்ஜி இல்லாமலே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புயல் சேதங்களை நேரில் பார்வையிட திகா பகுதிக்கு செல்ல வேண்டியிருந்ததால் பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
West Bengal CM & Chief Secy arrived late by 30mins for cyclone review meet despite being in the same premises, according to sources. WB CM upon entering review meet handed over papers related to the cyclone impact & said that other meetings were lined up and left, as per sources. pic.twitter.com/h9dJcCT50V
— ANI (@ANI) May 28, 2021