மேற்கு வங்கத்தில் திடீர் பரபரப்பு... ஆளுநரை சந்தித்தார் மம்தா பானர்ஜி !!

மேற்கு வங்கத்தில் திடீர் பரபரப்பு... ஆளுநரை சந்தித்தார் மம்தா பானர்ஜி !!

Update: 2021-05-03 19:50 GMT

மேற்கு வங்க ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க மம்தா பானர்ஜி உரிமை கோரினார்.

294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்கத்தில் 292 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் இறந்து போனதால் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. ஆட்சி அமைக்க 148 இடங்கள் போதுமென்ற நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. மம்தா மீண்டும் முதல்வராகிறார்.

மேற்குவங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றிபெற்றுள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கொல்கத்தாவில் இன்று  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மம்தா பானர்ஜி. அவர் முதல்வராக பொறுப்பேற்க அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும் அவருக்கு ஆறு மாத காலம் அவகாசம் இருப்பதால் முதல்வராக பொறுப்பேற்று, ஒரு தொகுதியில் வெற்றி பெறுவார் என தெரிகிறது. 

ஏதேனும் ஒரு தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரை ராஜினாமா செய்யச் சொல்லி அங்கு மம்தா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது 2 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாததால் அங்கு நடக்கும் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக தேர்வான நிலையில் ஆளுநரை சந்தித்தார். இதனையடுத்து அவர் முறைப்படி அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 5ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
 

newstm.in

Tags:    

Similar News