திருமணத்திற்கு மறுத்ததால் மனைவியின் தங்கையை கடத்திய நபர் கைது!!
திருமணத்திற்கு மறுத்ததால் மனைவியின் தங்கையை கடத்திய நபர் கைது!!
கர்நாடகா மாநிலம் தும்கூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அவரது மச்சினியை ஆட்களை வைத்து கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணி முடிந்து மகள் வீட்டுக்கு வராததால் பெண்ணின் தந்தை போலீஸில் புகாரளித்தார். புகாரின் பேரில் அலுவலகத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அவர் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் எண்ணை வைத்து போலீஸார் பெண்ணை மீட்டனர். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானறது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தும்கூரைச் சேர்ந்த தொழிலதிபரான தேவராஜ் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவரை மணந்துள்ளார். அதன் பிறகு அவரது தங்கையுடன் பழகி வந்திருக்கிறார். தங்கையும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது.
பின்னர் தேவராஜின் செயல்களில் சந்தேகமடைந்து அவரது மனைவி அவரை விட்டு விலகியிருக்கிறார். தனது அக்கா தேவராஜிடம் இருந்து விலகியதை அடுத்து அவரது தங்கையும் தேவராஜுடன் பழகுவதை நிறுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் தன்னுடன் தொடர்ந்து பழகும் படியும் கல்யாணம் செய்துக்கொள்ளும்படியும் தேவராஜ் மனைவியின் தங்கையை வற்புறுத்தியிருக்கிறார். அவரது தொந்தரவில் இருந்து தப்பிக்க அப்பெண் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
அப்போதுதான் அந்த பெண் கடத்தப்பட்டார். தற்போது தேவராஜையும் கடத்தல் வேலைக்கு உதவிய இருவரையும் தும்கூர் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in