மதுபோதையில் வீடு புகுந்து திருட முயன்ற நபர் அடித்துக் கொலை!!
மதுபோதையில் வீடு புகுந்து திருட முயன்ற நபர் அடித்துக் கொலை!!
திருச்சியில் மதுபோதையில் வீடுபுகுந்து திருட முயன்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்னூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு, கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு மதுபோதையில் வந்த மர்ம நபர் ஒருவர் கதவை தட்டினார். இதனை கண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் அந்த இளைஞரை பிடிக்க முயன்றார்.
ஆனால், அந்த போதை இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றார். அதனை தொடர்ந்து, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் நின்ற அந்த இளைஞரை கண்ட மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் தாக்கப்பட்ட இளைஞர் திருவானைகோவிலை சேர்ந்த அரவிந்த்(26) என்பது தெரிய வந்தது. இதனிடையே, அரவிந்த் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து, வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த கோட்டை காவல் நிலைய போலீசார், மணிகண்டன், அவரது நண்பர் அர்ஜுனன் ஆகியோரை கைது செய்தனர்.
newstm.in