கோல்டு வின்னர் நிறுவனத்தில் ரூ.18.5 கோடிக்கு எண்ணெய் திருடிய மேனேஜர்கள்!!

கோல்டு வின்னர் நிறுவனத்தில் ரூ.18.5 கோடிக்கு எண்ணெய் திருடிய மேனேஜர்கள்!!

Update: 2022-01-18 06:45 GMT

பிரபல காளீஸ்வரி ரீபைண்ட் ஆயில் நிறுவனத்தில் 18.5 கோடி ரூபாய் மதிப்பிலான சமையல் எண்ணெயை திருடி விற்ற உதவி மேலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தாழையுத்தில் செயல்பட்டு வரும் காளீஸ்வரி ரீபைண்ட் ஆயில் நிறுவனம் கோல்டு வின்னர், ஸ்ரீகோல்டு, எல்டியா தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்இந்நிலையில் தாழையூத்தில் உள்ள நிறுவனத்தில் பழனியைச் சேர்ந்த சிவக்குமார் (51),  கரண்குமார் (31) ஆகிய இருவரும் உதவி மேலாளராக பணியாற்றி வந்தனர்.

இருவரும் நீண்ட ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணியாற்றியதால் நிறுவனம் இவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததுஅந்த நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்ட இருவரும், கடந்த சில வருடமாக உற்பத்தி திறன் குறைவாக இருப்பதாக பொய்யான கணக்குகளை நிர்வாகத்திடம் காட்டி வந்துள்ளனர்.

இருவரும் இணைந்து இதுவரை 1,600 டன் சமையல் எண்ணெய் திருடி வெளிச்சந்தையில் இதுவரை விற்பனை செய்துள்ளனர். இவர்கள் திருடி விற்பனை செய்த சமையல் எண்ணெயின் மதிப்பு ரூபாய் 18.5 கோடி.

இது குறித்த அறிந்த நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது.  புகாரின் பேரில் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட சிவக்குமார் மற்றும் கரண்குமாரை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

newstm.in

Similar News