இந்தியன் 2 பட நடிகர் திடீர் மரணம் குறித்து மநீம தலைவர் கமல் இரங்கல் ட்வீட்..!!

இந்தியன் 2 பட நடிகர் திடீர் மரணம் குறித்து மநீம தலைவர் கமல் இரங்கல் ட்வீட்..!!

Update: 2021-10-11 22:11 GMT

மலையாள நடிகரும் மூன்று முறை தேசிய விருது வென்றவருமான நெடுமுடி வேணு உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 73.இந்த தகவலை அறிந்த தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் நெடுமுடி வேணு உடன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது மறைவுக்கு இரங்கல் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

500 படங்களில் நடிகர் என்பதோடு, திரைக்கதாசிரியர், இயக்குநர் எனவும் பரிமளித்தவர் நெடுமுடி வேணு. அனைத்துவகைச் செயல்பாடுகளுக்கும் தேசிய, மாநில விருதுகளை வென்றவர். 50 வருட சினிமா ஈடுபாட்டை நிறைவு செய்து மறைந்திருக்கிறார். அஞ்சலிகள்.


 

Tags:    

Similar News