கொரோனாவை வென்ற மன்மோகன் சிங்.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் !

கொரோனாவை வென்ற மன்மோகன் சிங்.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் !

Update: 2021-04-29 16:43 GMT

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடநலம் குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமாத்துறையினர், அரசியல்வாதிகள் என பலதுறைகளின் பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். 

நோய் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரம், குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் அபாயகரமான நிலையில் பரவி வருகிறது. 

இந்தநிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது மூப்பு காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்  விரைவில் நலம் அடைய பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில், மருத்துவ கண்காணிப்பில் இருந்த மன்மோகன் சிங் இன்று முழு உடல்நலம் பெற்று கொரோனாவை வீழ்த்தினார். அந்த வகையில் மன்மோகன் சிங் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

newstm.in


 

Tags:    

Similar News