நியூசி.யை வீழ்த்திய இந்திய அணி மற்றும் வீரர்கள் படைத்த சாதனைகள் ஏராளம் !

நியூசி.யை வீழ்த்திய இந்திய அணி மற்றும் வீரர்கள் படைத்த சாதனைகள் ஏராளம் !

Update: 2021-12-06 18:15 GMT

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி டெஸ்ட்  தொடரை கைப்பற்றியது. இத்தொடரில் இந்திய அணி மற்றும் வீரர்கள் படைத்த சாதனைகள் ஏராளம். 

இந்திய வந்த நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி ட்ராவில் முடிந்தது. இதனையடுத்து மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி நியூசிலாந்து அணியை பின்னாடி தள்ளியது. 124 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்தது. 121 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2ஆவது இடத்திலும்,  108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3ஆவது இடத்திலும் உள்ளன. ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி 4ஆவது இடத்திலும், பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும் நீடிக்கின்றன. 

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே 1956ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதுவரை 23 தொடர் முடிந்து உள்ளது. இரு நாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றி இருந்தார். அவர் 14 டெஸ்டில் 24 இன்னிங்சில் 65 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தார். இந்த தொடரில் ஹேட்லியின் இந்த சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தகர்த்தார். அஸ்வின் 9 டெஸ்டில் 17 இன்னிங்சில் 66 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.  

விராட் கோலி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக பொறுப்பேற்று 66 போட்டிகளில் அணியை வழி நடத்தியுள்ளார். இதில் 39 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்த நிலையில், சர்வதேச அளவிலான கிரிக்கெட்டின் ஒவ்வொரு பிரிவிலும் விராட் கோலி 50 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்காக பி.சி.சி.ஐ. அமைப்பு கோலிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளது. 

இத்தொடரில் நியூசிலாந்து வீரர் ஒரே இன்னிங்சில் பத்து விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தது மாபெரும்  சாதனையாக பதிவாகியுள்ளது. 

newstm.in

Tags:    

Similar News