பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை: ராகுல் காந்தி வேதனை.. டெல்லியில் நடந்த அந்த கோர சம்பவம் !!

பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை: ராகுல் காந்தி வேதனை.. டெல்லியில் நடந்த அந்த கோர சம்பவம் !!

Update: 2022-01-31 20:30 GMT

டெல்லியின் ஷாதரா பகுதியில் பட்டப்பகலில், பலர் முன்னிலையில் இளம்பெண் ஒருவருக்கு நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, அடித்து உதைத்து பெண்களாலேயே ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 
அந்த பெண் ஏற்கனவே சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஊர்வலம் அழைத்து வரப்பட்ட தகவல் மேலும் அதிர்ச்சி தருவதாக இருந்தது.

அதாவது பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் குடும்ப பெண்கள் தான் அவரை ஊர்வலாக இழுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெண்னை இந்த அளவுக்கு அவமதித்தது மனிதநேயமற்ற நிகழ்வாக இருந்தது. பல்வேறு தலைவர்களும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில், 20 வயது பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ நமது சமூகத்தின் மிகவும் குழப்பமான முகத்தை அம்பலப்படுத்துகிறது. கசப்பான உண்மை என்னவென்றால், பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை. இந்த வெட்கக்கேடான உண்மை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும், என்று அவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக இந்த சம்பவம் குறித்த போலீசாரின் விசாரணையில், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை, அந்தப் பகுதி இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் அந்த இளைஞர் தற்கொலை செய்து உயிரிழந்தார். அவரின் மரணத்துக்கு இந்த பெண் தான் காரணம் என அந்தப் பகுதியினர் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இது தொடர்பாக 14 வயது சிறுவன், 8 பெண்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர். 


newstm.in

Similar News