மாரி செல்வராஜ் வாளேந்தியும் வென்றிருக்கிறார்.. திமுக எம்எல்ஏ பாராட்டு !!
மாரி செல்வராஜ் வாளேந்தியும் வென்றிருக்கிறார்.. திமுக எம்எல்ஏ பாராட்டு !!
பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் 9ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் நட்டி, யோகிபாபு, கெளரி கிஷன், ரஜிஷா விஜயன், லால், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி தானு தயாரித்துள்ளார். தனுஷ், லால் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இப்படம் வெளியானதிலிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ’மாஸ்டர்’, ‘சுல்தான்’ படங்களைத் தொடர்ந்து தியேட்டரில் வெற்றிகரமாக ‘கர்ணன்’ ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.
’கர்ணன்’ பார்த்துவிட்டு பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், முன்னாள் மேயரும் திமுக எம்எல்ஏவுமான மா. சுப்பிரமணியன் ’கர்ணன்’ படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருக்கிறார்.
அதில், பரியேறும் பெருமாளில் பாமர மக்களின் விடுதலை உணர்ச்சியைப் படைத்தவர், கரியேறும் கர்ணனில் இன்னும் அதை கம்பீரமாய் வடித்திருக்கிறார். தடுக்கப்பட்டவரின் உரிமைகளுக்கு தாளேந்திய மாரி செல்வராஜ் வாளேந்தியும் வென்றிருக்கிறார். வாழ்த்துகள், என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டி இருக்கிறார்.
"பரியேறும் பெருமாளில் "
— Subramanian.Ma (@Subramanian_ma) April 10, 2021
பாமர மக்களின் விடுதலை உணர்ச்சியைப் படைத்தவர்
'கரியேறும் கர்ணனில் " இன்னும் அதை கம்பீரமாய் வடித்திருக்கிறார்.
தடுக்கப்பட்டவரின் உரிமைகளுக்கு தாளேந்திய மாரி செல்வராஜ்
வாளேந்தியும் வென்றிருக்கிறார்
வாழ்த்துகள். pic.twitter.com/gkZcbdXKV7
newstm.in