மேரிகோம் அசத்தல்! ஆசிய குத்துச்சண்டை போட்டி வெள்ளி வென்றார்!
மேரிகோம் அசத்தல்! ஆசிய குத்துச்சண்டை போட்டி வெள்ளி வென்றார்!
மே 24ம் தேதி துபாயில் தொடங்கிய ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நேற்று வரையில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள் பிரிவில் நடந்த 51 கிலோ பிரிவின் இறுதி ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரிகோம், கஜகஸ்தானின் நஸிம் கைஜாபாயை எதிர்கொண்டார். இந்த போட்டியில் மேரிகோம் 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் மேரிகோமுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஆசிய குத்துச்சண்டையில் மேரிகோம் 7-வது பதக்கம் (5 தங்கம், 2 வெள்ளி) இதுவாகும்.
64 கிலோ பிரிவில் இந்தியாவின் லால்பாட்சாய்ஷி 2-3 என்ற கணக்கில் மிலனா சப்ரோனோவாவிடம் (கஜகஸ்தான்) தோற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றார்.