புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சகோதரி திருமணம்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சிஆர்பிஎஃப் !

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சகோதரி திருமணம்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சிஆர்பிஎஃப் !

Update: 2021-12-16 08:30 GMT

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரி திருமணத்தை, சக ராணுவ வீரர்கள் சகோதரர் ஸ்தானத்தில் இருந்து நடத்திவைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சைலேந்திர பிரதாப் சிங் என்ற வீரரும் உயிரிழந்தார். அவரது சகோதரி ஜோதியின் திருமணம் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றது.

அப்பெண்ணின் திருமணத்தை மறைந்த வீரர் சைலேந்திர பிரதாப் சிங்கின் நண்பர்களான, சிஆர்பிஎஃப் வீரர்கள் சகோதரர் ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைத்தனர். இந்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இது குறித்து ட்விட்டரில் சிஆர்பிஎஃப் பகிர்ந்த திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது. புகைப்படத்துடன் பகிரப்பட்ட ட்விட்டரில், சிஆர்பிஎஃப் 110 பட்டாலியனைச் சேர்ந்த கேப்டன் சைலேந்திர பிரதாப் சிங் மறைந்திருக்கலாம். ஆனால் அவரை நாங்கள் யாரும் மறைக்கவில்லை. பிரதாப் சிங் மறைந்தார், மறக்கப்படவில்லை. அதனால் தான் இன்று ஜோதியின் திருமணத்தை நடத்துகிறோம், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராணுவ வீரர்கள் தங்களுடன் பணி புரிந்த வீரர் ஒருவரின் சகோதரி திருமணத்தை நடத்தி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 


newstm.in


 

Tags:    

Similar News