இது முடிந்த பிறகுதான் நயன்தாராவுடன் திருமணம்..! - விக்னேஷ் சிவன் பதில் !!

இது முடிந்த பிறகுதான் நயன்தாராவுடன் திருமணம்..! - விக்னேஷ் சிவன் பதில் !!

Update: 2021-06-28 11:29 GMT

தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே பரபரப்பான காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவரும் இணைந்து பணிபுரிந்த 'நானும் ரௌடிதான்' படத்திலிருந்து இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அடிக்கடி வெளிநாட்டுப் பயணம், இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்கள் என இந்த காதல் ஜோடி 90ஸ் கிட்ஸ்களை நிறையவே வெறுப்பேற்றியது.

நயன்தாரா தமிழில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருப்பதால்தான் திருமணத்தை தள்ளி வைத்துள்ளார் என்ற தகவல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சாட் செய்தார் விக்னேஷ் சிவன். அப்போது ஒரு ரசிகர், “நயன்தாராவை இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை...” எனக் கேள்வி கேட்டிருந்தார்.அதற்கு விக்னேஷ் சிவன், “ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. கல்யாணம் மற்றவற்றிற்கு... அதனால், திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா செல்வதற்காகக் காத்திருக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.

Tags:    

Similar News