கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு திருமணம் - மணப்பெண் இவரா??
கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு திருமணம் - மணப்பெண் இவரா??
கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவருடைய காதலியாக கிசுகிசுக்கப்பட்ட பிரபல நடிகையும் விடுமுறையில் இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது வதந்திக்கு வித்திட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிரான முன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினார். அதை தொடர்ந்து நான்காவது போட்டியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா இந்த கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியிலிருந்து விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பும்ரா விடுப்பு எடுத்துக்கொண்டது குறித்து பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதன்படி கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணத்திற்கு தயாராகி வருகிறார். அவருடைய வீட்டார் பெண் பார்த்து, அதற்கான அனைத்து செயல்பாடுகளையும் முடித்துவிட்டனர். திருமணம் நடைபெறுவது மட்டுமே பாக்கி என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இவரை திருமணம் செய்துகொள்ளப் போகும் அந்த பெண் யார் என்கிற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பும்ராவின் காதலி என்று கிசுகிசுக்கப்பட்ட நடிகை அனுபா பரமேவரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘இனி விடுமுறை தினம் எனக்கு’ என்று பதிவிட்டுள்ளார். இதனால் பும்ரா இவரை தான் திருமணம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பும்ரா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவரும் சமூகவலைதளம் மூலம் நட்பாகினர். இன்ஸ்டாவில் அனுபமா ஏதேனும் பதிவிட்டால், அதற்கு பும்ரா லைக் போடுவதும் கமெண்ட் செய்வதும் வாடிக்கையாக இருந்தது. அதேபோல பும்ரா ஏதேனும் பதிவிட்டால், அனுபமாவும் அதற்கு லைக் அல்லது கமெண்ட் போடுவார். இதனால் இருவரும் நெருங்கி பழகி வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அவர்கள் இருவருமே மறுத்தது குறிப்பிடத்தக்கது.