கார்களின் விலை உயர்வு... மாருதி சுஸுகி நிறுவனம் திடீர் அறிவிப்பு !

கார்களின் விலை உயர்வு... மாருதி சுஸுகி நிறுவனம் திடீர் அறிவிப்பு !

Update: 2021-04-17 10:09 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு தீவிரமாக இருந்தப்போது அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் கார் உற்பத்தி நிறுவனங்களும் தப்பவில்லை. அப்போது கார்களை வாங்க பல்வேறு சலுகைகளை அறிவித்தது கார் நிறுவனங்கள். 

ஆனால் அதன்பின்னர் நிலைமை அப்படியே மாறியது. இந்தியாவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் பெரும்பாலான கார்களின் விலையை உயர்த்தி உள்ளது. இந்த விலை ஏற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கார் உற்பத்திக்கான செலவுகள் கூடி இருப்பதால் இந்த விலை ஏற்றத்தை செய்ய வேண்டி உள்ளதாக மாருதி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

இதில் ஸ்விப்ட் மற்றும் செலிரியோ கார்களை தவிர மற்ற அனைத்து கார்களின் விலையையும் மாருதி உயர்த்தியுள்ளது. அதிகபட்சமாக 22,500 ரூபாய் வரை பல்வேறு கார்களில் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. கார் விலை உயர்வு இந்தாண்டில் இது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் கார்களின் விலையை மாருதி உயர்த்தி இருந்தது.

இந்நிலையில் இதே ஆண்டில் இரண்டாவது முறையாக கார்களின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்த விலை ஏற்றம் குறித்து கடந்த மார்ச் மாதத்தின் பிற்பாதியில் மாருதி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Tags:    

Similar News