மருத்துவ மாணவர் சேர்க்கை – கலந்தாய்வு இன்று தொடக்கம்!!
மருத்துவ மாணவர் சேர்க்கை – கலந்தாய்வு இன்று தொடக்கம்!!
தமிழகத்தில் மருத்தவ மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
19 வகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரையில் நேற்று வெளியிட்டார். மதுரையில் மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது இதுவே முதல் முறை.
தமிழகத்தில் 19 வகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக 64,900 பேர் விண்ணப்பித்தனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2,676 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13,832 இடங்களும் உள்ளன.
பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் முதல்கட்ட இணைய கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில், முதல் கட்டமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் இன்று பங்கேற்க உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
newstm.in