மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Update: 2022-01-21 17:06 GMT

மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு 2 ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அத்துடன், 49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், 219 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு 2 ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என்றார். தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.

மதுரையில் கலைஞர் நூலகம் அமைவது தங்களுக்கு பெருமை என்றும், மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப மதுரையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில், பாதுகாப்பாக போட்டியை கண்டு களிக்கக்கூடிய வகையில், நவீன வசதியுடன் கூடிய நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் எனக் கூறினார்.

Similar News