7 இடங்களில் மெகா ஜவுளி பூங்கா! பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தகவல்!

7 இடங்களில் மெகா ஜவுளி பூங்கா! பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தகவல்!

Update: 2021-02-01 11:48 GMT

இந்திய வரலாற்றில் காகிதம் இல்லாத முதல் பட்ஜெட்டை பாஜகவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய, அடுத்த 3 ஆண்டுகளில் 7 இடங்களில் மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று தெவித்துள்ளார். 

நடப்பாண்டிற்கான பட்ஜெட், 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புறங்களிலும், நீர்நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம் நீட்டிக்கப்பட உள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஊட்டச்சத்து இயக்கம் 2.0 என்ற புதிய  திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக  கூறிய நிதி அமைச்சர், இது ஒருங்கிணைந்த திட்டமாக அமல்படுத்தப்படும் என்றும் பெருமிதம் தெரிவித்தார். மத்திய அரசு மே மாதத்தில் 'ஆத்ம நிர்பர் பாரத்' தொகுப்பை அறிவித்தது ஆத்ம நிர்பர் பாரத் திட்டம்' 130 கோடி இந்தியர்களுடைய நம்பிக்கையின் வெளிப்பாடு என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மின்னணு முறையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை காண்பதற்காக இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News