ஆண்கள் இதை அணிய கூடாதாமே.. உண்மையா? உஷார்!!

உடலில் இறுக்கமான ஆடைகள் அந்த இடத்தி ஆண்களுக்கு அதிக வெப்பத்தை உண்டாக்குகிறது. விந்தணுக்கள் உற்பத்தியாகும் விரைப்பையில் அதிக சூடு உஷ்ணம் படக்கூடாது. இங்குதான் விந்தணுக்கள் சேமிக்கப்படுகிறது. விந்தணுக்கள் ஆரோக்கியமாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருக்க இவை பெரிதும் துணைபுரிகிறது.

Update: 2020-03-03 02:01 GMT

இப்படியெல்லாமா சொல்வீர்கள் என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் குழந்தையின்மை பிரச்சனையை அதிகமாக சந்திக்கும் கணவன்மார்களுக்கு விந்தணுக்கள் தான் பிரச்சனையே. விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவும், வீரியம் குறைவும் தான் இவர்களுக்கு குழந்தை பேற்றில் சிக்கலை உண்டாக்குகிறது. 

பழங்காலத்தில் ஆண்கள் ஜட்டி போன்ற உள்ளாடைகளை அணியவில்லை. கோவணம் தான் அணிந்திருந்தார்கள். அதிலும் காட்டன் துணியில் முக்கோண வடிவில் துணியை கிழித்து பயன்படுத்தி வந்தார்கள்.  பிறகு தான் பட்டாபட்டி டிரெளசர். அதை தொடர்ந்து முக்கோண வடிவில் ஜட்டி என்று உருமாறலாயிற்று. ஆனால் தற்போது ஆய்வுகள் முடிவில் இறுக்கமான ஆடைகளின் வெப்பத்தால் விந்தணுக்கள் வீரியம் குறைவதாக தெரிவித்துள்ளது. 

உடலில் இறுக்கமான ஆடைகள் அந்த இடத்தி ஆண்களுக்கு அதிக வெப்பத்தை உண்டாக்குகிறது.  விந்தணுக்கள் உற்பத்தியாகும் விரைப்பையில்  அதிக சூடு உஷ்ணம் படக்கூடாது. இங்குதான் விந்தணுக்கள் சேமிக்கப்படுகிறது. விந்தணுக்கள் ஆரோக்கியமாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருக்க இவை  பெரிதும் துணைபுரிகிறது.

ஆனால் அந்த இடத்தில் அழுத்தமும் அதிகபபடியான வெப்பமும் கொடுக்கும் போது இங்கு விந்தணுக்கள் ஆயுள் குறைகிறது. அங்கு இரத்த ஓட்டம் சீராக செல்வதும் தடுக்கப்படுகிறது.  கோடைகாலத்தில் வியர்வை அதிகரிக்கும் போது அந்த இடத்தில்  தொற்று உண்டாகவும் செய்கிறது. 

அந்த இடத்தில் காற்று போகாமல் இறுக்கி பிடிக்கும் உள்ளாடைகளை தவிர்த்து குறிப்பாக முக்கோண வடிவ உள்ளாடைகளை தவிர்ப்பது ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு உதவியாக இருக்கும்.  இயன்றவரை பட்டாபட்டி என்று சொல்லகூடிய உள்ளாடைகளை அணியுங்கள். ஆண்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருந்தால் இல்லற வாழ்க்கையும்   நன்றாக இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.  

newstm.in

Tags:    

Similar News