ஆண்களுக்கு ஆண்கள்.. பெண்களுக்கு பெண்கள் தான்.. மாநகராட்சி கடும் உத்தரவு !!

ஆண்களுக்கு ஆண்கள்.. பெண்களுக்கு பெண்கள் தான்.. மாநகராட்சி கடும் உத்தரவு !!

Update: 2021-11-16 20:30 GMT

மசாஜ் சென்டர்கள் என்றாலே தவறான எண்ணம் கொள்ளக்கூடாது என்று அண்மையில் வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. ஒருசில இடங்களில் ஸ்பாக்களில் நடக்கும் பாலியல் தொழில் காரணமாக ஸ்பாக்கள் நடத்திவரும் அனைத்துதரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். 

இந்த நிலையில், ஸ்பாக்கள், சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களில் எதிர்பாலினத்தவர்களைக் கொண்டு மசாஜ் மற்றும் அழகு செய்ய தடை விதிக்கப்படுவதாக அசாம் மாநிலம் கவுஹாத்தி மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து கவுஹாத்தி மாநகராட்சி ஆணையர் தேவாஷிஷ் சர்மா வெளியிட்டுள்ள உத்தரவில், மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஸ்பாக்கள் மற்றும் யுனிசெக்ஸ் பார்லர்களில் பல முறைகேடுகள் நடப்பதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. எனவே பொது ஒழுக்கம் மற்றும் குடிமை சமூகத்தை நிர்வகிக்கும் சட்டங்களை மதிக்க மாநகராட்சி கடமைப்பட்டுள்ளது. 

அந்தவகையில், புதிய விதிகளின்படி இனி பார்லர்கள், ஸ்பாக்கள், சலூன் கடைகள் தனி அறைகள் அல்லது அறைகள் இருக்கக்கூடாது. பிரதான கதவுகளுடன் வெளிப்படையானதாக அறைகள் இருக்க வேண்டும். மேலும், ஆண்களுக்குப் பெண்களோ அல்லது பெண்களுக்கு ஆண்களோ அழகுபடுத்தவோ அல்லது மசாஜ் செய்யவோ கூடாது. இந்த புதிய நடைமுறையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், எனத் தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:    

Similar News