மியான்மரில் ராணுவ புரட்சி.. அதிகாலையில் ஆளுங்கட்சி தலைவர் சிறைபிடிப்பு! ஓராண்டுக்கு அவசர நிலை நீட்டிப்பு !

மியான்மரில் ராணுவ புரட்சி.. அதிகாலையில் ஆளுங்கட்சி தலைவர் சிறைபிடிப்பு! ஓராண்டுக்கு அவசர நிலை நீட்டிப்பு !

Update: 2021-02-01 10:43 GMT

மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் அந்நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சியை அறிவித்தது.

இந்தநிலையில் ஆங் சான் சூகி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  மியான்மரில் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அந்நாட்டில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. ஆங்சாங் சூகி உள்ளிட்ட தலைவர்கள் காவலில் வைத்துள்ள நிலையில் மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மியான்மர் ராணுவம், பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

newstm.in

Tags:    

Similar News