பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21.. ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21.. ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

Update: 2021-12-17 05:45 GMT

2020-ம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பேசிய பிரதமர் மோடி, மகள்கள் மற்றும் சகோதரிகளின் உடல்நலம் குறித்து இந்த அரசு தொடர்ந்து அக்கறை கொள்கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மகள்களை பாதுகாக்க அவர்கள் சரியான நேரத்தில் திருமணம் செய்துகொள்வது அவசியம். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இதனை தொடர்ந்து ஜெயா ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிந்துரை செய்து தங்கள் ஆய்வறிக்கையை ஒன்றிய அரசிடம் டிசம்பர் மாதம் சர்ப்பித்தது.

இந்நிலையில், ஜெயா ஜெட்லி தலைமையிலான குழு சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  

ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் இந்த திட்டம் மசோதாவாக நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக அமலுக்கு வர உள்ளது.    

இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News