அமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகள் மேல் ஆசை இல்லை : உதயநிதி அதிரடி!!
அமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகள் மேல் ஆசை இல்லை : உதயநிதி அதிரடி!!
தனக்கு அமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகள் மேல் ஆசை இல்லை என்று கோவையில் நடைபெற்ற திமுக உறுப்பினர்கள் சேர்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
கோவையில் திமுகவில் இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், கொரோனாவில் இருந்து தமிழகத்தை காப்பாற்றி உள்ளோம். இனிவரும் நோயையும் எதிர்கொள்வோம் என்று கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை, ஆவின் பால் விலையை முதல்வர் குறைத்துள்ளார் என்று கூறிய அவர், தமிழக மக்களின் நலனுக்காக அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தொகுதிக்கு 10,000 பேரை திமுகவில் சேர்க்க வேண்டும் என இலக்கு தரப்பட்டு 24 லட்சம் பேரை இணைத்துள்ளோம். திமுக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் சேர்ந்து 2 கோடி பேரை திமுகவில் சேர்க்க வேண்டும் என்ற இலக்கு தரப்பட்டுள்ளது.
அதனை முடிக்க வேண்டும், 8 மாத சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என்று பேசினார்.
மேலும், தான் அமைச்சர் துணை முதல்வர் பொறுப்பிற்கு ஆசைபடாதவன். கடந்த தேர்தலில் கோவை மக்கள் திமுகவுக்கு ஏமாற்றம் அளித்தீர்கள். மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் எங்களை ஏமாற்றி விடாதீர்கள் என்றும் அவர் கூறினார்.
newstm.in