அமைச்சரின் உதவியாளர் ரூ.15 லட்சம் மோசடி! கைக்குழந்தையுடன் இளம்பெண் புகார்!
அமைச்சரின் உதவியாளர் ரூ.15 லட்சம் மோசடி! கைக்குழந்தையுடன் இளம்பெண் புகார்!
அமைச்சர் நிலோஃபர் கபிலின் உதவியாளர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.15 லட்சம் ஏமாற்றிவிட்டதாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயசுதா (30) ஒரு . முதுகலைப் பட்டதாரி. இவர் கைகுழந்தையுடன் வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீலின் தனி உதவியாளரான பிரகாசம் நண்பர் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகம் ஆனதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர், தொழிலாளர் நலத்துறையினர் இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அமைச்சர் நிலோபர் கபீலிடம் கூறி அந்த வேலையை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
அதற்காக ரூ.15 லட்ச ரூபாய் பிரகாசத்திடம் கொடுத்தேன், ஆனால் வேலை வாங்கித் தரவில்லை என புகார் தெரிவித்துள்ளார். கடன் வாங்கி 15 லட்சம் கொடுத்த நிலையில், வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாததால் பிரகாசத்திடம் பணத்தை அந்த பெண் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
ஆனால் அவர் தர மறுத்ததால் 2019ம் ஆண்டு அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து பிரகாசம் 7 லட்சம் கொடுத்துள்ளார். மீதி 8 லட்சத்தை ஒரு வருடம் கழித்து தருவதாக கூறினார். பின்னர் பிரகாசம் இரண்டு செக்களை கொடுத்துள்ளார்.
ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் தெரிவித்தபோது, ரூ.8 லட்சம் பணத்தைத் தர முடியாது எனக் கூறி னக்கும் ன் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார் என அந்த இளம்பெண் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in