இந்திய ஒன்றியம் எனக்கூறி பதவியேற்ற அமைச்சர்கள்..!
இந்திய ஒன்றியம் எனக்கூறி பதவியேற்ற அமைச்சர்கள்..!
புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று 50 நாட்களுக்கு மேலாகியும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அமைச்சர் பதவியை யாருக்கு ஒதுக்குவது என்ற குழப்பம் நிலவியதால் அமைச்சரவையை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது.
இந்தச் சூழலில், கடந்த 23ம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, அவரிடம் புதிய அமைச்சரவை பட்டியலை வழங்கினார். அதில், பாஜகவிற்கு 2 அமைச்சர்களும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர்களும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.அதேபோல், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன் மற்றும் சந்திரா ப்ரியங்கா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவரும், “இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்பு…” என்ற கூறி பதவியேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.