அதிசயம்.. ஒரே நாளில் திருமணம்... ஒரே நாளில் குழந்தை பெற்ற இரட்டை சகோதரிகள்!!

அதிசயம்.. ஒரே நாளில் திருமணம்... ஒரே நாளில் குழந்தை பெற்ற இரட்டை சகோதரிகள்!!

Update: 2021-12-10 04:15 GMT

கேரளா மாநிலம் கோட்டயம் அருகே தலயோல பரம்பு என்ற பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர். இவரது மகள்களான ஸ்ரீபிரியா மற்றும்  ஸ்ரீலட்சுமி ஆகிய இருவரும் ஒரே பிரசவத்தில் பிறந்து இணைபிரியா சகோதரிகளாக வளர்ந்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒரே நாளில், ஒரே மண்டபத்தில்  திருமணம் செய்து கொள்ள ஆசைபட்டுள்ளனர். திருமண வயதை நெருங்கிய இவர்களின் விருப்ப படியே அவரது தந்தை இருவருக்கும் ஒரே நாளில் திருமணத்தை முடித்து வைத்துள்ளார்.

இரட்டை சாகோதரியான இருவருக்கும் அவர்கள் பிறந்த மருத்துவமனையிலேயே குழந்தையை பெற்றெடுக்கவும் விரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது அவரை மருத்துவமனையில் அனுமதித்த அன்று இரவே ஸ்ரீலட்சுமிக்கும் பிரசவ வலி ஏற்பட்டு, அவரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீபிரியாவிற்கு மதியம் 2.20 மணியளவில் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. இதையடுத்து ஸ்ரீலட்சுமியும் மாலை 6.45 மணிக்கு பெண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அக்குழந்தைகள் இருவருக்கும் ஒரே வகையான ரத்த பிரிவு எனவும், அவை “ஒ” பாசிட்டிவ் வகை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News