மிஸ் வேர்ல்ட் 2021அழகி போட்டி.. இந்தியாவுக்கு மற்றொரு மகுடம் கிட்டுமா?
மிஸ் வேர்ல்ட் 2021அழகி போட்டி.. இந்தியாவுக்கு மற்றொரு மகுடம் கிட்டுமா?
70ஆவது உலக அழகி பட்டத்துக்கான சர்வதேச அளவிலான போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இந்தியா சார்பில் மானசா கலந்துகொண்டு கவனம் ஈர்த்துள்ளார். இவர் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் இந்தியா சார்பில் உலக அழகி போட்டியில் கலந்து கொள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 'மிஸ் இந்தியா' அழகி போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் அந்த ஆண்டு நடைபெறும் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது. இதில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மானசா வாரணாசி வெற்றிபெற்று, மிஸ் இந்தியா அழகி பெற்றார். இதன்மூலம் நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இவர் இந்தியா சார்பில் கலந்துகொள்ள உள்ளார்.
23 வயதான மானசா, ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். பொறியியல் படிப்பை முடித்த இவர், நிதி தகவல் பரிமாற்ற ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சான் ஜுவான் (San Juan) என்ற தீவில் உள்ள கொலிசியோ டி போர்ட்டோ ரிக்கோ ஜோஸ் மிகுவல் அக்ரேலாட்டில் உலக அழகி 2021 போட்டி இந்திய நேரப்படி இன்று (டிச.16) நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் மானசா வாரணாசி கலந்துகொள்கிறார். உலகம் முழுவதிலுமிருந்து 125 அழகிகள் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர். நிச்சயம் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மானசா வாரணாசி பரதநாட்டிய நடனம் பயிற்சி பெற்றவர். தனது ‘பியூட்டி வித் எ பர்பஸ்’ திட்டத்தின் (BWAP) ஒரு பகுதியாக, தெலுங்கானா அரசாங்கத்துடன் இணைந்து புதிய '1908 பிரச்சாரத்தை' தொடங்கியுள்ளார். இந்த பிரச்சாரத்தின் கீழ், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அண்மையில் நடந்த மிஸ் யூனிவர்சல் போட்டியில் இந்தியாவின் சாந்து வெற்றிபெற்று அழகி பட்டம் சூடியது குறிப்பிடத்தக்கது.
newstm.in