10,000 பேருக்கு பிரியாணி..150 ஆடு, 350 கோழி.. களை கட்டிய முனியாண்டி விலாஸ்திருவிழா!
10,000 பேருக்கு பிரியாணி..150 ஆடு, 350 கோழி.. களை கட்டிய முனியாண்டி விலாஸ்திருவிழா!
அசைவ உணவு வகைகளுக்கு பெயர் போன மதுரையில் முனியாண்டி திருவிழாவில் 10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி பிரசாதமாக வழங்கி அசத்தியிருக்கிறார்கள் முனியாண்டி விலாஸ் நிர்வாகத்தினர்.
பல வருடங்களுக்கு முன்னர் மதுரை, வடக்கம்பட்டியை சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், மாநிலங்களைக் கடந்து ஆந்திரா, கர்நாடகம், மும்பை போன்ற இடங்களிலும், கடல் கடந்து சீனா, சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளிலும் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் அசைவ உணவகங்களை துவங்கினார்கள்.
இவர்கள் துவங்கிய இடங்களில் எல்லாம் உணவின் ருசிக்கு கட்டுப்பட்ட வாடிக்கையாளர்கள், அந்தப் பகுதிகளில் முனியாண்டி விலாஸை வெற்றி விலாஸாக மாற்றினார்கள். அதன் பின்னர், பல ஆண்டுகளாக லாபகரமாக முனியாண்டி விலாஸை இன்று வரையில் நடத்தி வருகின்றனர்.
இவர்களின் காவல் தெய்வமான முனியாண்டி கோயில் மதுரை, வடக்கம்பட்டியில் இருக்கிறது. வருடந்தோறும் தை மாதத்தில் இந்த முனியாண்டி கோயிலில் திருவிழா களை கட்டும்.
இந்த வருட தைமாதத்தையொட்டி, முனியாண்டி திருவிழாவில், வெவ்வேறு இடங்களில் இருக்கும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கூடி, திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு 150 ஆடுகள், 350 கோழிகள் என முனியாண்டிக்கு பலி கொடுத்து, பலி கொடுத்த ஆடு, கோழிகளை சமைத்து சுமார் 10,000 க்கும் அதிகமானோருக்கு சுடச்சுட பிரியாணியாக பிரசாதம் வழங்கியிருக்கின்றனர்.
newstm.in