சமரசத்திற்கு தயாராகும் மோடி! 50 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு!!
போடோ ஒப்பந்தம் கையெழுத்தானதைக் கொண்டாடும் வகையில், அசாம் மாநிலம் கோக்ரஜார் நகரில் வரும் 7-ம் தேதி விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசாம் போடோ அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற தீவிரவாத அமைப்புகளுடனும் உடன்பாடு எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் டெல்லியில் கூறும் போது,“போடோ ஒப்பந்தம் கையெழுத்தானதைக் கொண்டாடும் வகையில், அசாம் மாநிலம் கோக்ரஜார் நகரில் வரும் 7-ம் தேதி விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற தீவிரவாத அமைப்புகளுடன் உடன்பாடு குறித்து பிரதமர் மோடி தனது முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 50 ஆண்டு காலங்களாக இருந்து வரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in