கொரோனாவை விட சாலை விபத்தால் தான் அதிக உயிரிழப்பு.. மத்திய அமைச்சர் வேதனை !!
கொரோனாவை விட சாலை விபத்தால் தான் அதிக உயிரிழப்பு.. மத்திய அமைச்சர் வேதனை !!
இந்தியாவில் ஆண்டுக்கு கொரோனா மரணங்களை விட சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தான் அதிகம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
டெல்லியில் வாகன விபத்து பாதுகாப்பு பற்றிய காணொலி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகளவிலான சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்தில் சிக்கி இறக்கின்றனர். இது கொரோனாவால் ஏற்படும் மரணங்களை விட அதிகம். சாலை விபத்து இறப்புக்களை 50% குறைக்க வேண்டும்.
2030ஆம் ஆண்டுக்குள் எந்த விபத்து மற்றும் இறப்புகளும் ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் தனது தொலைநோக்கு திட்டம். சாலை விபத்துக்களில் 60 சதவீத மரணங்களில் சிக்குபவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் தான். எனவே பைக் போக்குவரத்துக்கு தான் தற்போது அதிக பாதுகாப்பு தேவை.
மேலும் இந்தியாவில் ஓட்டுநர்களுக்கான சிறந்த பயிற்சி, மேம்பட்ட பயிற்சி மையங்கள் ஆகியவை முக்கியம். நல்ல சாலைகளை உருவாக்கி, சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது என் தார்மீக பொறுப்பு. நமது இலக்குகளை அடையவும், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் பேசினார்.
newstm.in