13 நகரங்களில் 80 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்! ஹெச்.ராஜாவின் வில்லங்க ட்வீட்! ரெய்டுக்கான அஸ்திவரமா?
13 நகரங்களில் 80 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்! ஹெச்.ராஜாவின் வில்லங்க ட்வீட்! ரெய்டுக்கான அஸ்திவரமா?
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தூண்டி விட்டுள்ளதாக ராகேஷ் திகாயம்மீது தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ள நிலையில், விரைவில், ராகேஷ் திகாயத்திற்கு எதிராக மத்திய அரசு காய் நகர்த்தும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, இந்த சட்ட மூலம் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயத்தை மத்திய அரசு முற்றிலும் கைவிட்டு, நெல், கோதுமை, கொள்முதல் செய்வதை முற்றிலும் கைவிட முயற்சிக்கிறது. வேளாண் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு நிதி பெறுகிறோம் என்ற பெயரில் பெரு முதலாளிகளை ஊக்கு விக்குகிறது. ஆன்லைன் டிரேட் என்கிற பெயரில் உலக வர்த்தக சூதாட்டத்தை சட்டம் அனுமதிக்கிறது. எனவே இந்த சட்டம் விவசாயி
களை பேரழிவு கொண்டு செல்வதோடு சிறு வணிகர்களையும் ஒட்டு மொத்தமாக ஒழிக்கும் என விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக, வட மாநிலங்களில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து, வட மாநில விவசாயிகள் ஒன்று கூடி, தலைநகா் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். மத்திய அரசு - விவசாயிகள் இடையே நடைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
அண்மையில் டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் சார்பில் நடைபெற்ற பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் விவசாயி ஒருவர் பலியானார். ஏராளமான போலீசார் காயமைடைந்தனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது, எச்.ராஜா ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில், டில்லியில் விவசாயிகள் போராட்டத்தை தூண்டி விட்டுள்ள ஏழை விவசாயி ராகேஷ் திகாயத்திற்கு 4 மாநிலங்களில் உள்ள 13 நகரங்களில் 80 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன என தெரிவித்துள்ளார்.
https://t.co/OljmRAWHHV டில்லியில் விவசாயிகள் போராட்டத்தை தூண்டி விட்டுள்ள ஏழை விவசாயி ராகேஷ் திகாயத்திற்கு 4 மாநிலங்களில் உள்ள 13 நகரங்களில் 80 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன.
— H Raja (@HRajaBJP) February 14, 2021
அவரது அந்த ட்வீட் வருமானவரித்துறையினரையும், மத்திய அரசையும் உசுப்பேத்திவிடுவதுபோல உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், விரைவில் ராகேஷ் திகாயத் மேல் நடவடிக்கை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.