மிக பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி : ரசிகர்கள் கவலை !!
மிக பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி : ரசிகர்கள் கவலை !!
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தனது 78 வயதிலும் அசராமல் நடித்துவரும் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இந்நிலையில் நேற்று அமிதாப், தனக்கு சில உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால் விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் இதனால் தொடர்ந்து பிளாக்கில் தன்னால் எழுத முடியாது எனவும் கூறினார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று அமிதாப் பச்சன் தனது வலைப்பக்கத்தில், ‘மருத்துவப் பிரச்சினைகள்... அறுவை சிகிச்சை... எழுத முடியவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அமிதாப் பச்சன் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.