12 வயது மகனுடன் தாய் ஆபாச நடனம்.. வைரல் வீடியோ.. போலீசில் புகார் !!
12 வயது மகனுடன் தாய் ஆபாச நடனம்.. வைரல் வீடியோ.. போலீசில் புகார் !!
சமூகவலைதளங்களில் லைக்ஸ்களை பெற ஒவ்வொருவரும் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் விசித்திரமான செயல்களை செய்வார்கள். தமிழகத்தில் ரவுடி பேபி, இலக்கிய போன்றவர்கள் வீடியோக்கள் வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். இவர்களை போல் எல்லா இடங்களிலும் சில ரவுடி பேபிக்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆனால் தனது மகனான சிறுவனுடன் பெண் ஒருவர் ஆபாச நடனமாடிய வீடியோ வெளியாகி பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 12 வயது மகனுடன் ஆபாச நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த டெல்லி மகளிர் ஆணையம் அந்தப் பெண்னின் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியை அப்பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஃபாலோ செய்கிறார்கள். தனது 12 வயது மகனுடன் ஆபாசமாக நடமாடும் வீடியோவை அந்தப்பெண் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது போன்று பல வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்துள்ளார். தனது மகனுடன் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வதா என அந்தப்பெண்ணின் செயலை சிலர் திட்டிப்பதிவிட்டதை தொடர்ந்து அவர் தனது பக்கத்தில் இருந்து அந்த வீடியோக்களை நீக்கிவிட்டுள்ளார்.
வீடியோ விவகாரம் டெல்லி மகளிர் ஆணையத்துக்கு எட்ட இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த சிறுவனுக்கு என்ன கற்பிக்கப்படுகிறது. பெண்களிடம் ஆபாசமாக இருப்பதை ஊக்குவிப்பது போல் அவரது நடவடிக்கை உள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் சிறுவனனின் மனநிலையே மாறிவிடும். எனவே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி போலீஸூக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
I wonder what's wrong with mothers subjecting their own kids to sexual overtones like these. Kindly see handle of this kid & mother both @NCPCR_ @KanoongoPriyank https://t.co/9hDsc1dwCYhttps://t.co/hbvDf3IobK
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) July 15, 2021
Please counsel her. It's not healthy for the child. Many videos pic.twitter.com/8zacJadPZk
newstm.in