வாகன ஓட்டிகள் அதிர்ச்சி… 120 ரூபாயை நெருங்கும் பெட்ரோல் விலை..!

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி… 120 ரூபாயை நெருங்கும் பெட்ரோல் விலை..!

Update: 2021-07-20 16:27 GMT

பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், நாட்டிலேயே மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தான் அதன் விலை உச்சத்தில் உள்ளது. போபாலில், உச்சபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.20க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.98.67க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்தபடியாக, மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் - ரூ.107.83க்கும், டீசல் ரூ.97.45க்கும், ஹைதராபாத்தில் பெட்ரோல் ரூ.105.83க்கும், டீசல் - ரூ.97.96க்கும், பெங்களூருவில் பெட்ரோல் ரூ.105.25க்கும், டீசல் ரூ.95.26க்கும், சென்னையில் பெட்ரோல் ரூ.102.49க்கும், டீசல் ரூ.94.39க்கும், டில்லியில் பெட்ரோல் ரூ.101.84க்கும், டீசல் ரூ.89.87க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 5 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் அதிகரித்துள்ளது. இவ்வாறு பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

ஏற்கெனவே நாளுக்கு நாள் உயர்ந்து வரும் எரிபொருள் விலை அதிகரிப்புடன், இந்த போக்குவரத்துச் செலவும் சேர்வதால் மாவட்டத்துக்கு மாவட்டம் பெட்ரோல், டீசல் விலை வெவ்வேறு விலையுடன் காணப்படுகிறது. மாநிலங்கள் வசூலிக்கும் வரிக்கு ஏற்ப, மாநிலங்களுக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலை மாற்றமடைகின்றன.

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக இதர அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், சாமானிய மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.


சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமின்றி காணப்பட்டது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.49-க்கு விற்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.39-க்கு விற்பனையாகிறது.
Tags:    

Similar News