மலை ரயில் சேவை டிச.21 வரை ரத்து.. காரணம் இதுதான்.. சுற்றுலா பயணிகள் ஷாக் !

மலை ரயில் சேவை டிச.21 வரை ரத்து.. காரணம் இதுதான்.. சுற்றுலா பயணிகள் ஷாக் !

Update: 2021-12-15 08:30 GMT

மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான ரயில் சேவை டிசம்பர் 21ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகையின் அழகை மலை ரயிலில் பயணித்தப்படி ரசிக்கலாம். அங்கு சுற்றுலா செல்வோரின் கனவு பயணமாகவும் இந்த மலை ரயில் பயணம் இருக்கும். மலை பாதையில் உற்சாக பயணத்துடன் கண்களை கொள்ளை கொள்ளும் அளவுக்கு இயற்கை விருந்து படைக்கும். 

இந்த நிலையில், வரும் 21ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நீலகிரி மலைப் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கல்லார் - குன்னூர் இடையேயான வழித்தடத்தில் மண் சரிந்துள்ளது. மரங்களும் விழுந்துள்ளன. இவற்றைச் சரிசெய்யும் பணி நடப்பதால் மேட்டுப்பாளையம் - உதகை சிறப்பு ரயில் சேவை வரும் 21ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இது, மறுமார்க்கத்திலும் பொருந்தும். 
இருப்பினும், குன்னூர்-உதகை இடையேயான ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in

Similar News