பொதுமக்களுக்கு எம்பி அட்வைஸ்… எரிபொருள் விலை ஏறுவதால் சைக்கிள் ஓட்டுங்க..!

பொதுமக்களுக்கு எம்பி அட்வைஸ்… எரிபொருள் விலை ஏறுவதால் சைக்கிள் ஓட்டுங்க..!

Update: 2021-07-12 16:47 GMT

“பெட்ரோல் - டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும்” என்று பாஜக எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தாவணகெரே தொகுதி பாஜக எம்பியாக இருப்பவர் சித்தேஷ்வர். இவரிடம், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல் - டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறையும். பெட்ரோல் - டீசல் மற்றும் சிலிண்டர்களின் விலையை குறைக்க பிரதமர் மோடி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும். சைக்கிள் பயன்படுத்துவதால் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது, சிக்கனமாது. இதன்மூலம் உடல் வலிமை பெறுவதுடன், எந்த நோயும் நம்மைத் தாக்காது” எனக் கூறினார்.
Tags:    

Similar News