மச்சினியின் குளியலறை நிர்வாண வீடியோ! மனைவிக்கே வாட்ஸ்-அப் செய்த கணவர்!
மனைவிக்கு தங்கையின் குளியல் வீடியோவை அனுப்பிய கணவர்.. அதிரவைக்கும் பின்னணி
சென்னையில் மனைவியின் தங்கை குளிக்கும் ஆபாச வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (31). இவருக்கு 28 வயதில் மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் குடித்து விட்டு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்ததால் அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் மனைவியை அவர் பலமுறை அழைத்தும் வீட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில் தனது மனைவியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட தினேஷ், என்னுடன் குடும்பம் நடத்த வராவிட்டால் உன்னுடைய தங்கையின் ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் மனைவியின் உறவினர்கள் 2 பேரின் செல்போனுக்கு அவருடைய தங்கை குளியல் அறையில் இருக்கும் வீடியோவையும் அனுப்பியுள்ளார்.
தினேஷின் செயலால் அதிர்ந்து போன அவருடைய மனைவி உடனடியாக இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தினேஷைக் கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்காவைப் பார்ப்பதற்காக தங்கை, வீட்டிற்கு வந்த போது, அவருக்குத் தெரியாமல் குளிக்கும் காட்சிகளை வீடியோக்களாக பதிவு செய்து தினேஷ் ரசித்து வந்தது தெரிய வந்துள்ளது. மனைவியின் தங்கை குளிக்கும் காட்சிகளை, அவர் வீட்டிற்கு வந்த போது தினேஷ் தொடர்ந்து எடுத்து வந்திருக்கிறார் என்று விசாரணை நடத்திய போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
newstm.in