3 சிறுமிகள் கொலை.. தந்தைக்கு மரண தண்டனை !! பரபரப்பு தீர்ப்பு !!

3 சிறுமிகள் கொலை.. தந்தைக்கு மரண தண்டனை !! பரபரப்பு தீர்ப்பு !!

Update: 2021-11-13 21:38 GMT

மூன்று மகள்களைக் கொன்ற 35 வயது நபருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில் நடந்த பயங்கரமான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிரச் செய்தது. கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி இரவு 3 நிறுமிகள் கொலை செய்யப்பட்டனர். அதாவது, வீட்டிலிருந்த அஞ்சனி (11), ரட்டோ (7), புட்டோ (4) ஆகியோரை, அவரது தந்தை சிதாமி என்கிற சித்து கொலை செய்தார். 

அதாவது, மனைவி தனது பெற்றோர் வீட்டில் இருந்த நிலையில், குடிபோதையில் சித்து வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு, குழந்தைகள் மூவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிலிருந்த எரிவாயு உருளையைத் திறந்துவிட்டு வீட்டுக்குத் தீவைத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் வீட்டில் இருந்த குழந்தைகளும் தீயில் கருகி உயிரிழந்தன. இந்த சம்பவம் நடந்தது முதல் சித்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் சித்து தனது மகள்களை கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து, 3 மகள்களை கொலை செய்த சித்துவுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தும், வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

newstm.in


 

Tags:    

Similar News