2 முறை தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் காலமானார் !!

2 முறை தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் காலமானார் !!

Update: 2021-02-20 17:06 GMT

மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட திரைத்துறைகளில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஐசக் தாமஸ் கொடுக்காபுளி கடந்த வியாக்கிழமை காலமானார்.

மலையாள திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த இவர், கன்னட சினிமாவில் வெளியான ‘ தாயி சஹேபா’ என்கிற படம் மூலம் இசையமைப்பாளராக கால்பதித்தார். தனது முதல் படத்திலேயே அவர் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார்.மலையாளத்தில் வெளியான ‘ஆதமிண்ட மகன் அபு’ என்கிற படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான இரண்டாவது தேசிய விருது அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் கேரள அரசின் மாநில விருதையும் அவர் 5 முறை வென்றுள்ளார்.

ஐசக் தாமஸ் கொடுக்காபுளி இசையமைத்த படங்களில் குட்டிசிரன்கு, பாவம், சஞ்சாரம், குஞ்சான்னதண்டே கதா, பருதீஷா, வெட்டிக்குல்ல வழி, கதாவசேசன், குருஷேத்திரம் உள்ளிட்ட படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தன. 72 வயதான ஐசக் தாமஸ் முதுமை காரணமாக திரைப்படத்துறையில் இருந்து விலகி தன் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட மரணம் அடைந்தார். 

அவருடைய மறைவுக்கு மலையாளம், தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

Similar News