காதலியாகவும், தோழியாகவும் இருந்த என் அன்பே! அமைதியான ஓய்வில் இரு! போனி கபூர் உருக்கம்!!

காதல் மனைவி ஸ்ரீதேவியின் இழப்பை தாங்க முடியாத அவரின் கணவர் போனிகபூர், தனது ஆற்றாமையை உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Update: 2020-02-24 18:13 GMT

 

இந்திய சினிமாவின் எவர் க்ரீன் தேவதையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி இறந்து இரண்டாண்டுகள் உருண்டோடி விட்டது. ஆராதனைக்குரிய அழகாலும், ஆக சிறந்த நடிப்பற்றலாலும் இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை ஸ்ரீ தேவியின் மறைவு ஈடு கட்டமுடியாத பேரிழப்பாகவே இருக்கிறது. அவர் மண்ணுலகை விட்டு சென்றாலும், அவர் விட்டு சென்ற திரைப்படங்களை பார்த்து ஆற்றுப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்திருக்கிறார்கள் அவர் மீது அபிமானத்துக்குரிய ரசிகர்கள். 

காதல் மனைவி ஸ்ரீதேவியின் இழப்பை தாங்க முடியாத அவரின் கணவர் போனிகபூர், தனது ஆற்றாமையை உருக்கமாக, இரு குழந்தைகள் தாயையும், நான் எனது தோழியையும், நண்பனையும் இழந்து விட்டேன். அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இந்த சமயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பதினர், நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஸ்ரீதேவியின் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த உலகுக்கு அவர் நடிகையாகவும், தேவதையாகவும் இருந்தார். ஆனால், எனக்கு அவர் காதலியாகவும், தோழியாகவும், என் குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்தார். அவர்களுக்கு எல்லாமாகவும் அவரே இருந்தார். எங்கள் குடும்பத்தின் தூணாக அவர் இருந்தார். தன்னுடைய இடத்தை வேறு ஒருவரால் நிரப்ப முடியாத இடத்தில் அவர் இருக்கிறார். அன்பால் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டிய நேரமிது.

நடிகைகளின் வாழ்வில் திரைச்சீலைகள் ஒருபோதும் விலகுவதில்லை. ஏனெனில், அவர்கள் வெள்ளித்திரையில் பிரகாசிப்பவர்கள். இந்த நேரத்தில் என் ஒரே கவலை ஸ்ரீதேவி இல்லாமல் எனது மகள்களை பாதுகாக்கும் வழியை கண்டறிவதே. அவர் எங்களின் வாழ்க்கையாகவும், எங்களின் வலிமையாகவும், எங்கள் புன்னகைக்கு காரணமாகவும் இருக்கிறார். 

என் அன்பே! அமைதியான ஓய்வில் இரு. நம் வாழ்க்கை மீண்டும் ஒரே மாதிரி அமையாது” என போனி கபூர் உருக்கமாக தனது வருத்தத்தையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தி இருந்தார்.

newstm.in

Tags:    

Similar News