நாகினி சீரியல் நடிகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது... அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

நாகினி சீரியல் நடிகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது... அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

Update: 2021-06-05 19:40 GMT

நாகினி தொடரில் நடித்த பிரபல நடிகர் பியர்ல் வி புரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு Dil Ki Nazar Se Khoobsurat என்கிற சீரியல் மூலம் தன்னுடைய திரை பயணத்தை துவங்கியவர் பியர்ல் வி புரி. இந்த சீரியலை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்தாலும், இவரது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகப்படுத்தியது என்றால் 'நாகினி 3 ' சீரியல் தான். இதில் நடித்து மிகவும் பிரபலமானார். 

இந்நிலையில், பியர்ல் வி புரியை, வாலிவ் போலீஸ் அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் . இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக சிறுமி ஒருவரை சில ஆண்டுகள் முன்னதாக இவர் சீரழித்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விஷயம் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில், சாமுராய் படத்தில் ஹீரோயின் அனிதா இவருக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

Tags:    

Similar News