மகள்களை நிர்வாணமாக்கி நரபலி! தாய், தந்தை செய்த அராஜகம்!
மகள்களை நிர்வாணமாக்கி நரபலி! தாய், தந்தை செய்த அராஜகம்!
ஆந்திராவில் அதிசயம் நடக்கும் எனக்கூறி பெற்றோர் தங்களது இரண்டு மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு படித்திருந்தாலும் மக்களிடம் மூடநம்பிக்கை ஒழியவில்லை என்பதற்கு இந்த சம்பவம் தான் சிறந்த உதாரணம். ஆந்திர மாநிலம் மதனபள்ளி பகுதியை சேர்ந்த தந்தை கல்லூரி முதல்வர், தாய் உதவி பேராசிரியர் தம்பதிக்கு இரண்டு மகள்கள்.
அந்த தம்பதி தங்களது இரண்டு மகள்களையும் நரபலி கொடுத்துள்ளனர். இரண்டு மகள்களையும் நிர்வாணமாக்கி அடித்தே கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதிசயம், அற்புதம் நடக்கும் என கூறி மகள்களை நரபலி கொடுத்த இருவரும், தங்களின் மகள்கள் விரைவில் உயிருடன் வருவார்கள் என்று உளறிக் கொண்டு இருப்பது கொடூரத்தின் உச்சம்.
ஒரு இரவு பொறுமையாக இருந்தால் இறந்த இரண்டு மகள்களும் உயிருடன் வருவார்கள் என்று அந்த தம்பதி கூறுகின்றனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதனையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதனபள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in