பட்டப்பகலில் கும்பலால் வீட்டின் முன்பு நிர்வாணப்படுத்தப்பட்ட பெண் ! பெரும் அதிர்ச்சி !!

பட்டப்பகலில் கும்பலால் வீட்டின் முன்பு நிர்வாணப்படுத்தப்பட்ட பெண் ! பெரும் அதிர்ச்சி !!

Update: 2021-08-30 18:14 GMT

அண்மைக்காலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். ஆனாலும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் பெண் ஒருவர் நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கப்பட்ட கொடூரம் தெலங்கானாவில் நடந்துள்ளது. 

சூரியபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் நாயக் என்பவர் ஜூன் 13ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் ஜாமீனில் அண்மையில் வெளியேவந்தார். இதனையடுத்து சொந்த வீட்டுக்கு செல்லாமல் தனது சகோதரி வீட்டில் அவர் தங்கினார்.

எனினும் கொலை செய்யப்பட்ட சங்கர் நாயக்கின் உறவினர்கள் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில், ஜாமீனில் வெளியேவந்த அந்தப் பெண்ணை சாலைக்கு இழுந்துச் சென்று நிர்வாணப்படுத்தி, சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பெண்ணின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளனர்.

உடனே பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து தப்பித்துக்கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசாரால் அப்பெண் மீட்கப்பட்டார். தற்போது அவர் சூர்யாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


newstm.in

Tags:    

Similar News